இழைவியக்கம்

புதுச்சேரி முதல்வரிடம் மனு அளித்தல்
பத்திரிக்கையாளர் சந்திப்பு
புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை - முதல்வர்

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

சமூக நல அமைப்புகளும் ஒன்றிணைந்து முதல்வருக்கு மனு அளித்தனர்.

புதுச்சேரிக்கு  தனிமாநில தகுதி பெற வலியுறுத்தி சட்டமன்ற  உறுப்பினர் திரு.கோ.நேரு அவர்கள் தலைமையில் 16-12-2022 அன்று கீழ்க் கண்ட மனு அளிக்கப்பட்டது

 பெறுநர் :                                                                                                              
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,                                         
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.

ஐயா வணக்கம்.

பொருள்: புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சி மற்றும் சமூகஅமைப்புளின் கூட்டத்தைக் கூட்டுதல்  சட்டபேரவையில் சிறப்பு சட்டமன்றத்தைகூட்டி     தீர்மானம் நிறைவேற்ற கோருதல் - தொடர்பாக.*

                        
புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்திட  வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர்      G.. நேரு (எ) குப்புசாமி அவர்கள் தலைமையில் ஒன்றிணந்துள்ள 60க்கும் மேற்பட்ட சமூக இயக்கங்கள் சார்பாக இம்மனுவைத் தங்களின் மேலான கவனத்திற்கும்இ உரிய நடவடிக்கைக்கும் அளிக்கின்றோம். 


புதுச்சேரி கடந்த 1954இ நவம்பர் 1-இல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றது. கடந்த 1962 ஆகஸ்ட் 16-இல் இந்தியாவோடு இணைந்துஇ இந்திய அரசியல் சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. புதுச்சேரி விடுதலைப் பெற்ற போது 'State of Puducherry' என்று அழைக்கப்பட்டு மாநிலத் தகுதியோடுதான் இருந்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைப் பறிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட, அதிகாரமற்ற 'யூனியன் பிரதேசமாக' உள்ளது. 


புதுச்சேரி விடுதலைப் பெற்ற பிறகுப் 'பிரெஞ்சிந்திய ஒப்பந்தம் (Treaty of Ceassion)' 1956 நவம்பர் 28-இல் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த    ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவற்றை செயல்படுத்தாமல் புதுச்சேரியின் ஒட்டு மொத்த உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி அரசின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 'பிரெஞ்சிந்திய ஒப்பந்தம்' காலாவதியாகிவிட்டது என்கின்றனர்.

17.12.1970-இல் புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வேண்டுமென நாடாளுமன்ற மேலவையில் இமாச்சல பிரதேச தனி மாநிலச் சட்ட முன்வரைவை ஆதரித்துப் பேசும் போது, பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கவிஞர் ச. சிவப்பிரகாசம் (புதுவை சிவம்) பேசியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் இன்றைய நிலை வளர்ச்சி ஏதுமின்றி மிகவும் பின் தங்கியே (Backwardness) உள்ளது. குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எவ்வித அதிகாரம் இல்லாமல் உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநர் 'நிர்வாகி (Administrator)' என்ற நிலையில் அனைத்து முடிவுகளையும் எடுப்பவராகவும்இ தீர்மானிப்பராகவும் உள்ளார். 

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம், 1963-இல் துணைநிலை ஆளுநர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனை '(Aid and Advice)' அடிப்படையிலேயே அனைத்தும் முடிவெடுக்க வேண்டுமென கூறுகிறது. ஆனால், 2020 மார்ச் 11-இல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "புதுச்சேரி அமைச்சரவையின் முடிவுகளிலும், அன்றாட பணிகளிலும் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு" எனத் தீர்ப்பளித்துள்ளது. மேலும்இ மத்திய உள்துறையின் நேரடிக் கட்டிப்பாட்டில் உள்ள அரசுத் தலைமைச் செயலர்இ செயலர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். இதனால், மொத்தத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எவ்வித அதிகாரமும், மதிப்பும் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. 


ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால் முழு       பட்ஜெட் தாக்கல் செய்ய கால தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக மார்ச் மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டிய பட்ஜெட் மிக கால தாமதம் ஏற்பட்டு முழு பட்ஜெட் ஆக போட முடியாமல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தாக்கல் செய்யப்படுகிறது. இருந்தும் புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய கோரும் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை. சென்ற முறை தாக்கல் செய்யப்பட்ட மொத்த பட்ஜெட் தொகை 10,000 கோடி ரூபாய் ஆகும். இதில் புதுச்சேரியின் சொந்த வருவாய் தொகை 6557.23 கோடி ரூபாய் ஆகும். அதாவது மொத்த நிதியில் 60 விழுக்காடு புதுச்சேரியிலேயே திரட்டப்படுகிறது. மீதமுள்ள நிதி அளிப்பதில்தான் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி. வரி மூலம் 2700 கோடி ரூபாய் மத்திய அரசுக்குச் செல்கிறது. ஆனால், புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய பங்குத் தொகை சுமார் 1200 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்குவதில்லை. ஏதோ கடமைக்கென்று குறைந்தத் தொகையை மட்டுமே அளிக்கிறது. 


யூனியன் பிரதேச அரசு என்பதால் மத்திய நிதிக் குழுவில் சேர்க்கப்படாமல் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய போதிய நிதிக் கிடைக்கவில்லை. புதுச்சேரிக்குத் தனிக்கணக்குத் தொடங்கிய பின்னால், கடன் மற்றும் வட்டிக்கே பெருமளவில் நிதி செலவிட வேண்டியுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட கடன் தொகை 9650 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கேட்டும் மத்திய அரசு செய்யாவில்லை. இதனால், புதுச்சேரி அரசு 9650 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. 


புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியில் இருந்த 'பணித் தேர்வாணையம் (Recruitment Commission)' விடுதலைப் பெற்ற புதுச்சேரியில் உருவாக்கப்படவில்லை. இதனால், குரூப்- ஏ, குரூப்-பி உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் இந்திய அரசின் ஒன்றியப் பணித் தேர்வாணையத்தின் (Union Public Service Commission-UPSC) மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பு பறிபோய் வெளி மாநிலத்தவர் பணியமர்த்தப்படுகின்றனர். மேலும், புதுச்சேரியில் நிலவும் சமூக இடஒதுக்கீடும் பின்பற்றப்படாம மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வஞ்சிக்கப்படுகின்றனர். 


அதேபோல்இ மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளை வெளி மாநிலத்தவர் பயன்பெறும் வகையிலேயே உருவாக்குகின்றனர். இதனால், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர், அஞ்சல் துறை, பி.எஸ்.என்.எல்., ரயில்வே துறை, புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட துறைகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதனால், புதுச்சேரியில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி மாணவர்களுக்குப் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 18 படிப்புகளுக்கு மட்டுமே 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதமுள்ள படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததால் புதுச்சேரி மாணவர்கள் உயர் கல்விப் பயில முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில்கூட புதுச்சேரிக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய பரிந்துரைப் புறந்தள்ளப்பட்டுஇ தமிழ்நாடு, டில்லி என வெளி மாநில வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதிலும்இ,மண்ணன் மைந்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி புதுச்சேரி தனி மாநிலத் தகுதி இல்லாமல் பாதிக்கப்படுவது குறித்து ஏராளமாக சொல்லிக் கொண்டே போக முடியும்.

கடந்த 2006 ஆகஸ்ட் 2-இல் நாடாளுமன;றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை "புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி தருவது சரியே" எனக் கூறியதுடன் அதற்கான காரணங்களையும் ஆதாரத்துடன் விளக்கி உள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்தகால ஆட்சிகளில் இதுவரையில் 11 முறைத் தனி மாநிலத் தகுதிக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தனி மாநிலத் தகுதி வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. தாங்களும் 2021 தேர்தல் அறிக்கையில் கூட ஆட்சியாளர்களுக்கு அதிகார வர்கத்தின் தடையற்ற ஒத்துழைப்பை  
உறுதி செய்ய தனி மாநில அந்தஸ்தே தீர்வு என முதன்மையாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால்இ மத்திய அரசு புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைக்கு இதுவரையில் செவிசாய்க்கவில்லை. 


எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்திடும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திடவும் வலியுறுத்துகிறோம்.
 
மிக்க நன்றி,

சட்டமன்ற   உறுப்பினர் மற்றும்
சமூக நல அமைப்புகள்

 தேதி:16.12.2022     இடம்:புதுச்சேரி


புதுச்சேரிக்கு  தனிமாநில தகுதி பெற வலியுறுத்தி சட்டமன்ற  உறுப்பினர் திரு.கோ.நேரு அவர்கள் தலைமையில்  

1.திராவிடர் விடுதலை கழகம்,
2.தமிழ் மீனவர் விடுதலை வேங்கை,
3.மக்கள் உரிமை கூட்டமைப்பு,
4.திராவிடர் கழகம்,
5.தந்தை பெரியார் திராவிட கழகம்
6.மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்
7.அம்பேத்கர் தொடர்படை 8.மக்கள் வாழ்வுரிமை இயக்கம்
9.நகரத் தலித் பாதுகாப்பு இயக்கம்
10. மாணவர் கூட்டமைப்பு 11.தமிழக வாழ்வுரிமைக் கட்சி
12.இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்
13.தமிழ் தேசிய பேரியக்கம் 14.நாம் தமிழர் கட்சி 15.புதுச்சேரி தன்னுரிமை கழகம்
16.புதுவை சிவம் அறக்கட்டளை
17.புதுச்சேரி படைப்பாளர் இயக்கம்
18.பெற்றோர் ஆசிரியர் சங்கம்
19தமிழ் தேசிய முன்னணி
20.பெரியார் சிந்தனையாளர் இயக்கம்
21.இந்திய தேசிய இளைஞர் முன்னணி
22.ஆம் ஆத்மி
23.அகில இந்திய மஜ்லிக் கட்சி
24.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
25.எஸ் டி பி ஐ
26.ராஜீவ் காந்தி விழிப்புணர்வு இயக்கம்
27.பி போல்ட்
28.இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் 29.கலாம் விதைகளின் விருட்சம்
30.புதுச்சேரி மக்கள் உரிமைக் கட்சி
31.புதிய நீதி கட்சி
32.மக்கள் நற்பணி இயக்கம் 33.இந்திய புரட்சியாளர் இயக்கம்
34.மக்கள் அதிகாரம்
35.புதுவை மாநிலம் மாணவர் மற்றும் பெற்றோர் சங்கம்
36.செம்படுகை நன்னீரகம் 37.இராவணன் படிப்பகம் 38.பழங்குடி மக்கள் பாதுகாப்பு இயக்கம் 39.புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை
40.அரசு ஊழியர்கள் சம்மேளன கூட்டு இயக்கம் 41.புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு 42.ஒருங்கிணைந்த பணியாளர்கள் சேவை மற்றும் நலச்சங்கம்
43. மனித உரிமைகள் செயல்பாட்டு மையம் புதுச்சேரி
44. மக்கள் நல முன்னணி 45.தலித் இயக்கங்களின்  ஜனநாயக முன்னணி
46உலகத் தமிழ் கழகம் 47.இந்திய மக்கள் சக்தி கழகம்  
48.தமிழர் களம் உட்பட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக